ராயபுரம், சென்னை, ராயபுரம், ஆதாம் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல், 83. இவர் குடும்ப பிரச்னை காரணமாக, வீட்டில் உள்ளோரிடம் கோபித்து, கடந்த 1ம் தேதி வெளியேறினார்.
கடந்த நான்கு நாட்களாக, கொருக்குப்பேட்டை, மன்னப்பன் தெருவில் உள்ள நண்பரின் துணி கடையில் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு துணிக்கடையில் சாமுவேல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.