பெருங்களத்துார் :தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலம் பெருங்களத்துாரில், ஏரிக்கரை சாலையை ஒட்டி, சித்ரா அவென்யூ உள்ளது.
இப்பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா, முறையான பராமரிப்பில்லாததால் சீரழிந்து காணப்படுகிறது.
குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் துருபிடித்து, உடைந்து விழும் நிலையில் உள்ளன. செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் மாறிவிட்டது. பாம்புகள் நடமாட்டமும் காணப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு செல்ல குழந்தைகளும், முதியோரும் அச்சப்படுகின்றனர்.
இது குறித்து, பல முறை புகார் கொடுத்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, சிறுவர் பூங்காவை சீரமைத்து, மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.