அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையமும், அறிவியல் நிலையமும் இணைந்து இயற்கை வேளாண் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
பயிர் மேலாண்மை இயக்குனர் கலா ராணி தலைமை வகித்தார் .ஆராய்ச்சி நிலைய தலைவர் கிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி உஷாராணி, பேராசிரியர்கள் ராமசுப்ரமணியன் செந்தில், விஞ்ஞானிகள் செல்வராணி, உஷாராணி, வேணுதேவன், விஜயகுமார், டாக்டர் சுமத்திரா கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் பதிலளித்தனர். பேராசிரியர் ராஜபாபு நன்றி கூறினார்.