விருதுநகர் : விருதுநகரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதில் இலவச வீட்டுமனை பட்டா, ரேஷன் அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டது.
இதில் ராஜபாளையம் ரிதம் அறிவுசார் குறைபாடுடையோர்க்கான சிறப்பு பள்ளி மாணவர்கள் மாநில விளையாட்டுப் போட்டிகளில் மாணவன் முனியசாமி 800மீ ஓட்டத்திலும், மாணவி ஜீவிதா நீளம் தாண்டுதல் போட்டியிலும், மாணவி அமலா பந்து எறிதல் போட்டியிலும் முதலிடம் பெற்று சாதித்தனர். கலெக்டர் மேகநாதரெட்டியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
2019ல் முன்னாள் படைவீரர் கொடிநாள் அதிக வசூல் சாதனை செய்த முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, சார் பதிவாளர் முத்துச்சாமி ஆகியோருக்கு வெள்ளி பதக்கம், பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.