விருதுநகர் : விருதுநகரில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்கு நடந்தது. மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாவட்டம், வட்டாரம், ஊராட்சிகள், கிராமங்களில் நவ. 25 முதல் டிச. 23 முடிய 3 வார காலம் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக டிச. 2ல் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி ஊர்வலத்தை விருதுநகர் மருத்துவ கல்லூரி நுழைவுவாயிலில் இருந்து துவங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகத்தில் முடிந்தது.
இதை தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தெய்வேந்திரன் வரவேற்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி தலைமை வகித்து பேசினார். மருத்துவ பணிகள் இணை இயக்குநர் முருகவேல், முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி பேசினர். உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.