விருதுநகர் : விருதுநகர் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து உள்ளிட்ட ஆகிய விளையாட்டுகளில் முதன்மை பெற்றதுடன் மாநில போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகளில் மூன்றிலும் முதன்மை பெற்று மாநில போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். மாநில அளவில் ஒரே பள்ளியில் மூன்று அணிகளும் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. கூடைப்பந்தாட்டத்தில் 19 வயதுக்குட்பட்ட பிரிவிலும், ஹாக்கியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவிலும் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
நீச்சல் போட்டியில் 5 போட்டிகளிலும், குத்துச்சண்டையில் 7 மாணவர்களும், சிலம்பத்தில் 2 பேரும், ஜிம்னாஸ்டிக்கில் ஒரு மாணவரும், தடகள போட்டியில் 2 மாணவர்களும், மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்களை, பள்ளி நிர்வாக குழு தலைவர் குணசேகரன், செயலாளர் ராஜா, பொருளாளர் முருகேசன், உப தலைவர் சிவானந்தம், இணை செயலாளர் பாலாஜி, பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன், ஆசிரியர்கள் பாராட்டினர்.