விருதுநகர் : விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு மலர் துாவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கொள்கை பரப்பு துணை செயலாளர் மாபா பாண்டியராஜன் தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை தலைவர் கலாநிதி, நகர செயலாளர் முகமது நெய்னார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் மச்சராஜா, கண்ணன், தர்மலிங்கம் பங்கேற்றனர்.
*சிவகாசி, திருத்தங்கலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், ராஜஅபினேஷ்வரன், பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, கட்சியினர் கலந்து கெண்டனர்.
*முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் தலைமையில் பஸ் ஸ்டாண்டில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. மான்ராஜ், கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
*ராஜபாளையம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். நகர் செயலாளர்கள் துரை முருகேசன், பரமசிவம் முன்னிலை வகித்தனர்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஜவஹர் மைதானம் வரை ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட இணைச்செயலாளர் அழகுராணி, ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.