'குடி'மகன் தொல்லை
திருப்பூர், பாளையக்காடு பெட்ரோல் பங்க் எதிரே குப்பை கொட்டும் இடத்தில் மது குடிப்போர் தொல்லை தாங்க முடியவில்லை. போதை தலைக்கேறி அங்கேயே உறங்குகின்றனர்.
- பால்பாண்டி, கருணாகரபுரி.
தர்மசங்கடம்
திருப்பூர், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் உள்ள பொதுக்கழிப்பிடத்துக்கு தண்ணீர் வினியோகம் அவ்வப்போது நிறுத்தி வைக்கப்படுகிறது. பெண்கள் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் கவனிக்க வேண்டும்.
- சம்யுக்தா, கோவில்வழி.
தினமும் மின் தடை
பழங்கரை, யுவராஜ் ராசிவில்லாவில் தினமும் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. உயர், தாழ்வழுத்த மின்சாரம் மாறிமாறி பதிவாகிறது.
- மணிகண்டன், பழங்கரை.
பணி இழுபறி
திருப்பூர், மங்கலம் ரோடு - காலேஜ் ரோடு சந்திப்பு, அணைப்பாளையத்தில் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். தினசரி போக்குவரத்து நெரிசல் தவிர்க்க இயலாததாக உள்ளது.
- தனசேகர், அணைப்பாளையம்.
குழியால் ஆபத்து
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை எதிரில் உள்ள குழியை மூட வேண்டும். வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தடுமாறி விழும் நிலையில் உள்ளது.
- கார்த்திகேயன்,
கொங்கு மெயின் ரோடு.
கால்வாய் அடைப்பு
திருப்பூர், முத்து நகர், நான்காவது வீதியில் கால்வாய் சுத்தம் செய்யவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- ராஜமாணிக்கம், முத்து நகர்.
பயமுறுத்தும் பாம்பு
திருப்பூர், 15 வேலம் பாளையம், வெங்கடேஸ்வரா நகர், அண்ணா வீதி முட்புதர் நிறைந்து காணப்படுகிறது. பாம்புகள் இரவில் உலா வருகின்றன. கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
- செல்வி, அண்ணா வீதி.
இப்படி கொட்டலாமா!
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் பாலத்தில் மீன், இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் பாலத்தின் தடுப்புச்சுவரில் படிந்தபடியே அப்படியே உள்ளது.
- குணசேகர்,
ஈஸ்வரன் கோவில் வீதி.
பல்லடம், அருள்புரத்தில் இருந்து சேடர்பாளையம் செல்லும் சாலை வளைவில், மண் நிறைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். சாலையை சீர்செய்ய முன்வர வேண்டும்.
- சூர்யபிரகாஷ், அருள்புரம்.
சீரானது சாலை
திருமுருகன்பூண்டி ரிங்ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகி வருவதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. குழாய் உடைப்பு சீர்செய்யப்பட்டு, தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.
-மனோகரன், திருமுருகன்பூண்டி.
பெயின்ட் 'பளிச்'
பல்லடம் - பொள்ளாச்சி ரோடு, பல்லடம் தாலுகா அலுவலகம் முன் வேகத்தடைக்கு வெள்ளை நிற பெயின்ட் அடிக்காததால், வாகன ஓட்டிகள் தடுமாறுவதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. உடனடியாக வெள்ளை நிற பெயின்ட், நெடுஞ்சாலைத்துறையால் அடிக்கப்பட்டுள்ளது. நன்றி.
- ஆனந்த், பல்லடம்.