உடைமாற்றும் அறை, கைப்பிடி கம்பிகள், படிக்கட்டுகள் சேதமடைந்தன. தற்போது வரை பயணிகள் குளிக்க தடை உள்ளதால் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளிக்க முடியாமல், மக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இப்படி அடிக்கடி சேதமாதவதை தவிர்க்கும் வகையில் குளிக்கும் இடத்தில் தொங்கு பாலம் அமைக்கலாம். அல்லது குற்றாலம் அருவியில் உள்ளது போன்று நிரந்தர படிக்கட்டு அமைப்பை ஏற்படுத்தலாம்.
உடைமாற்றும் அறை, கம்பிகளை புதுப்பித்தால் போதும். ஆண்டில் 6 முதல் 9 மாதங்கள் அருவியை பார்க்க முடியும் என்பதால் மதுரை மக்களின் 'வீக் எண்ட்' சுற்றுலாவாக குட்லாடம்பட்டி மாறிவிடும். வாடிப்பட்டி ஒன்றியத்துக்கும் இதன் மூலம் வருவாய் கிடைக்கும்.
வனத்துறையின் கீழ் பராமரிப்பு செய்ய முடியாவிட்டால் மீண்டும் சுற்றுலா வளர்ச்சி நிதியின் கீழ் சீரமைக்க வேண்டும்