மதுரை : மதுரை மாட்டுத்தாவணியில் 6 லட்சம் சதுரடியில் 10 மாடியில் கட்டப்பட்டுள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின்திறப்பு விழா நடந்தது.
இந்த புதிய சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஷோருமை அதன் நிறுவனர் எஸ்.ராஜரத்னம் திறந்து வைத்தார். விழா ஏற்பாடுகளை ஷோரூம் நிர்வாக இயக்குனர் சபாபதி, நிர்வாகிகள் ரோஷன் ஸ்ரீ ரத்னம், யோகேஷ் ஸ்ரீ ரத்னம் செய்திருந்தனர். இயக்குனர் ரேவதி, நிர்வாகி சுனிதா, வினியோகஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கூறியதாவது:
மீனாட்சி அம்மன் கோயில், மன்னர் திருமலை நாயக்கர் மகால் என வரலாறு, பாரம்பரிய பெருமைமிக்க மதுரையில்ஒரு சிகரமாக இந்த ஷோரூமை திறந்துள்ளோம்.
தென்னகத்திலுள்ள10 மாவட்டங்களைஇணைக்கும் வகையில் 5 ஏக்கர் பரப்பளவில், 6 லட்சம் சதுரடியில் 10 மாடிகளில் பலவிதமான பொருட்களை குவித்துள்ளோம்.1000 கார்கள் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதி உள்ளது.
தரைத்தளத்தில் உள்ள சூப்பர் ஜூவல்லரியில் டிச.,11 வரை ஒரு பவுன் தங்க நகைக்கு ரூ.2000 தள்ளுபடி உண்டு.
ஆண், பெண்களுக்கான ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர்கள், அழகுசாதனங்கள், பரிசு பொருட்கள், அலைபேசிகள், ஆப்டிகல்ஸ், லக்கேஜஸ், காலணிகள், மளிகை பொருட்கள், உணவகம் என தனி பிரிவுகள் அமைத்துள்ளோம்என்றனர்.