மதுரை : உயர்கல்வி பாதுகாப்பு அமைப்பின் மதுரை மாவட்ட கன்வீனர் சீனிவாசன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலையை நிர்வகிக்கும் குழுவில் வேந்தரின் பிரதிநிதிகளாக ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி மற்றும் தொழில் நிறுவன நிறுவனர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கற்பித்தல் பணியில் அனுபவம் இல்லை. குழுவை மாற்றியமைக்க வேண்டும். இருவருக்கு பதிலாக தகுதியான பேராசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன்,ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு மத்திய கல்வித்துறை செயலர், பல்கலை வேந்தர், துணைவேந்தருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.