கள்ளக்குறிச்சி : கலவரம் நடந்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில், 140 நாட்களுக்கு பின் நேற்று பள்ளி திறக்கப்பட்டு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கின.
தொடர்ந்து பள்ளி சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், பள்ளியை திறந்து நேரடி வகுப்புகள் நேற்று முதல் துவங்கின.
கலவரம் நடந்து, 140 நாட்களுக்கு பின், பள்ளி நேற்று திறக்கப்பட்டு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கின.
முன்னதாக பள்ளி வளாகத்தில் இறைவணக்கம் கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளி திறப்பையொட்டி, பல்வேறு பகுதியிலிருந்து இயக்கப்பட்ட பள்ளி வாகனங்களில் மாணவர்கள் வந்தனர்.
அதுபோல, பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றனர்.
மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் நுழைவு வாயிலில் மாணவர்கள் மற்றும் பெற்றோரை வரவேற்று 'டிஜிட்டல் பேனர்' வைத்து, வாழை மரம் கட்டப்பட்டிருந்தது. ஏ.டி.எஸ்.பி., விஜயகார்த்திக்ராஜா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.