விருதுநகர் : மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை, மோசடியாக விற்க முயன்றவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நிலத்தை பதிவு செய்ய தாமதப்படுத்தி வந்த நிலையில், அந்த நிலம் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமானது என தெரிந்தது.
இதையடுத்து, கொடுத்த பணத்தை ரெங்கநாயகி திருப்பிக் கேட்ட போது, அவர்கள் தராமல் மோசடி செய்தனர்.
விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பத்மநாபன், அங்குராஜ், சதீஷ்குமார், குழந்தை செல்வம், சுமதி, சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், சதீஷ்குமார் 43, என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.