திருப்பூர் : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமணன், 37. இவர் தன் மனைவி உமாவதி, 35, உடன், திருப்பூர் மாவட்டம், காங்கேயம், பெருஞ்சேர்வழியில் உள்ள மாமியார் மணி, 55, வீட்டுக்கு காரில் சென்றார்.
இதில், மாமியார் மணி, மருமகன் விஸ்வநாதன் ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர். காயமடைந்த ரமணன், உமாவதி காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்; வழியில், ரமணன் பலியானார். உமாவதி கோவையில் சிகிச்சை பெறுகிறார்.
காங்கேயம் போலீசார், லாரி டிரைவரான ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த விஜயகுமார், 32, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறியதாவது:
விபத்துக்குள்ளான கார், முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த டேங்கர் லாரி, கார் மீது மோதியது.
இவ்வாறு கூறினர்.