ரூ.100 கோடி மதிப்பு நிலம் தாரை வார்க்க முயற்சி: அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
Updated : டிச 06, 2022 | Added : டிச 06, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மதுரை: 'ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாத்தல், பராமரிப்பது, இயற்கை வளங்களின் அறங்காவலர்களான அரசு அதிகாரிகளின் கடமை' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.



latest tamil news



தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தளவாய்பாளையம் கலைசெல்வன் தாக்கல் செய்த மனு:

தளவாய்பாளையத்தில் குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள நிலம், புது ஏரி பாய்ச்சல் ஆதாரம் என வருவாய்த்துறை ஆவணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது விவசாயத்திற்கான நீராதாரமாக இருந்தது.
சாலை, மின் நிலையம் அமைத்தல் உட்பட அரசின் பல்வேறு பயன்பாட்டிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. மீதி உள்ள நிலம், 100 கோடி ரூபாய் மதிப்புடையது. இது, தனியாருக்கு வழங்கப்பட உள்ளது.

தனி நபருக்கு பட்டா வழங்குவது தொடர்பாக மக்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்தால் தெரிவிக்குமாறு சாலியமங்கலம் வருவாய் ஆய்வாளர், 2018ல் அறிவிப்பு வெளியிட்டார்.
அவ்வாறு வழங்கினால் அரசின் கருவூலத்திற்கு இழப்பு ஏற்படும். அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு கலைசெல்வன் குறிப்பிட்டார்.

விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு:
நிலம் அரசுக்குத் தேவை. தனிநபருக்கு பட்டா வழங்க முடியாது எனக்கூறி வருவாய் ஆய்வாளரின் அறிவிப்பை, பாபநாசம் தாசில்தார் மற்றும் உதவி கலெக்டர் ரத்து செய்துள்ளனர்.
வருவாய்த்துறை ஆவணங்களை சரிபார்க்காமல் வருவாய் ஆய்வாளர் அறிவிப்பு வெளியிட்டதை புறந்தள்ள முடியாது.






ஆக்கிரமிப்புகளிலிருந்து நீர்நிலைகளை பாதுகாத்தல், பராமரிப்பது, இயற்கை வளங்களின் அறங்காவலர்களான அரசு அதிகாரிகளின் கடமை. பாதுகாக்க அரசு தவறினால், மக்கள் நம்பிக்கை இழப்பர். இவ்வழக்கில் நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட நிலத்திற்கு சரியாக விசாரிக்காமல் பட்டா வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் ஆட்சேபனை கோர அறிவிப்பு வெளியிட காரணமாக இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரணை நடத்தி, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
06-டிச-202212:27:04 IST Report Abuse
அநாமதேயம் மூன்று பேரில் இருஅதிகாரிகளை விலைக்கு வாங்கி மூன்றாவது அதிகாரியை விலை பேசாமல் விரட்டி பணிய வைத்து இந்த தனியார் பட்டா மாறுதல் கோரியிருப்பாரோ.
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
06-டிச-202212:22:17 IST Report Abuse
ANANDAKANNAN K ஊழல் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை என்று நீதிமன்றங்கள் மரண தண்டனை விதிக்கிறதோ.....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
06-டிச-202211:05:59 IST Report Abuse
raja அந்த தனியாரு யாருன்னு பார்த்தீங்கன்னா தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X