காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் ஆர்த்தி தலைமையில், நேற்று காலை 11:00 மணிக்கு நடைபெற்றது.
அப்போது, காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., கட்சி சார்பில், கையில் வேப்பிலையுடன், கன்னத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு வந்து, கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனு அளித்த பின் பா.ஜ.,வை சேர்ந்த மாவட்ட செயலர் காயத்ரி கூறியதாவது:
செயற்கை கருத்தரித்தல் மையம் தனியாரிடம் அதிகளவில் உள்ளது.
செயற்கை கருத்தரித்தல் தேவைக்காக, ஏழை மக்கள் என்ன செய்வர். டாஸ்மாக் காரணமாக, மது அருந்தும் ஆண்களுக்கு அதிகளவில் குழந்தையின்மை பிரச்னைகள் வருகிறது.
இங்கே பிரச்னை யாருக்கு என பார்ப்பதில்லை. பெண்களையே குறை சொல்கிறார்கள். குழந்தையில்லாமல் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். எனக்கு குழந்தையில்லாமல், இத்தனை ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றுள்ளேன்.
காஞ்சிபுரத்தில், அரசு சார்பில் செயற்கை கருவூட்டல் மையம் அமைக்க கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.