காஞ்சியில் 3,252 சர்வே எண்களுக்கு தடை: அரசு நிலத்தை இனி விற்க முடியாது!
Updated : டிச 06, 2022 | Added : டிச 06, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு நிலங்களின் 3,252 சர்வே எண்கள் 'பிளாக்' செய்யப்பட்டுள்ளன. இன்னும் 3,096 சர்வே எண்கள் விசாரிக்கப்பட்டு 'பிளாக்' செய்யும் நடவடிக்கையில் வருவாய் துறையினர் பணியாற்றி வருகின்றனர். சர்வே எண்கள் 'பிளாக்' செய்யப்பட்ட நிலங்கள், வரும் காலங்களில் பட்டா பெறவோ அல்லது நிலத்தின் தன்மையை மாற்றவோ முடியாது. மோசடியாக பட்டா பெற்று வைத்திருந்த சர்வே எண்கள் பிளாக் செய்யப்பட்டால், பட்டா பெயர் மாற்றம், சப் - டிவிஷன் செய்தல் மற்றும் விற்பனை போன்ற எந்த பணிகளும் மேற்கொள்ள முடியாது.



latest tamil news



தமிழகத்தில் அரசு நிலங்களின் வகைப்பாடுகளில் ஒன்றான, அரசு கையகப்படுத்தி வைத்திருக்கும் யாரும் உரிமை கோரப்படாத நிலமாகிய அனாதீனம் நிலங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.

இந்த நிலங்கள் அரசு திட்டங்களுக்கும், வளர்ச்சி பணிகளுக்கும் அரசே நேரடியாக பயன்படுத்தி வருகிறது.
அதேசமயம், அனாதீனம் நிலங்களை அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, ரியல் எஸ்டேட் அதிபர்கள், புரோக்கர்கள் பலரும் மோசடி ஆவணங்களை கொண்டு பட்டா பெற்ற சம்பவங்கள் பல நடைபெற்றுள்ளன.



வருவாய் துறை தீவிரம்




பல ஆண்டுகள் கழித்து, விசாரணையில், அனாதீனம் நிலம் என்பது தெரியவந்து, வருவாய் துறை அதிகாரிகள் பட்டாவை ரத்து செய்து நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.
மேலும், நுாற்றுக்கணக்கான ஏக்கர் அனாதீனம் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், அவற்றை பாதுகாக்கவும், மோசடியாக பட்டா பெறுவதை தடுக்கவும் அனாதீனம் நிலங்களின் சர்வே எண்களை 'பிளாக்' செய்யும் நடவடிக்கைகள், வருவாய் துறையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அதிக அனாதீனம் நிலங்கள் இருக்கும் மாவட்டங்களில், காஞ்சிபுரம் மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் உள்ள அனாதீனம் நிலங்களின் சர்வே எண்களை பிளாக் செய்யும் பணிகள் பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அனாதீனம் நிலங்களின் தற்போதைய நிலை குறித்து, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் என வருவாய் துறை அதிகாரிகள் மட்டத்தில் அனைவரும் ஆய்வு செய்த பிறகு, அனாதீனம் நிலங்களின் சர்வே எண்கள் 'பிளாக்' செய்யப்படுகின்றன.






ஐந்து தாலுகாக்கள்




காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் என ஐந்து தாலுகாக்களில், இதுவரை 3,252 சர்வே எண்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளன.
இன்னும் 3,096 சர்வே எண்கள் உள்ள அனாதீனம் நிலங்கள் விசாரித்து 'பிளாக்' செய்யப்படவுள்ளன.

சர்வே எண்கள் 'பிளாக்' செய்யப்பட்ட நிலங்கள், இனி வரும் காலங்களில் பட்டா பெறவோ அல்லது நிலத்தின் தன்மையை மாற்றவோ முடியாது.
மோசடியாக பட்டா பெற்று வைத்திருந்த சர்வே எண்கள் பிளாக் செய்யப்பட்டால், பட்டா பெயர் மாற்றமோ அல்லது சப் - டிவிஷன் போன்ற எந்த பணிகளும் மேற்கொள்ள முடியாது.



அனாதீனம் என்றால் என்ன




அனாதீனம் நிலம் என்பது அரசு கையகப்படுத்தி வைத்திருக்கும் யாரும் உரிமை கோரப்படாத நிலமாகும். அதாவது, 1960க்கு முன்பாக, 30 ஏக்கர் நிலங்களுக்கு மேலாக பலர் நிலம் வைத்திருந்தனர். ஆனால், நில உச்சவரம்பு சட்டம் 1961ன் அடிப்படையில், 30 ஏக்கர் நிலங்களுக்கு மேல் வைத்திருந்தவர்களிடம் அரசு கையகப்படுத்தி கொண்டது. இந்த நிலங்களை இப்போது வைத்திருப்போருக்கு அரசு பட்டா வழங்குவதில்லை. பதிவுத்துறையில் நிலங்களை பதிவு செய்திருந்தாலும், பலர் இன்றும் பட்டா கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
06-டிச-202217:42:38 IST Report Abuse
PalaniKuppuswamy ஏன் இதை கோவில் நிலங்கள் நீர்நிலை சார்த்த அரசு இடங்களையும் Block விற்பனை தடை ஏற்படுத்தி வைக்கக்கூடாது . கோயில் அமைச்சர் செவிடனாகிவிட்டார் இதுபோல் நல்ல கருத்துக்கள் காதில் விழாது
Rate this:
Cancel
06-டிச-202212:07:43 IST Report Abuse
ஆரூர் ரங் உச்சவரம்பு? 1969 திமுக மதுரை மாநாட்டில் தனிநபர் 5 லட்சத்துக்கு மேல் சொத்து வைத்திருக்கக் கூடாது எனும் சட்டம் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Rate this:
p.raj-chennai - chennai,இந்தியா
06-டிச-202217:30:11 IST Report Abuse
p.raj-chennaiதற்போது 500000000000000000000 ஆக மாற்ற பட்டு உள்ளது ...
Rate this:
Cancel
06-டிச-202212:04:45 IST Report Abuse
ஆரூர் ரங் 30 ஏக்கருக்கு மேல்( இப்பொழுது 15 ஏக்கர் )வைத்திருக்கக் கூடாது என்று😛 உச்சவரம்பு. ஆனால் ஆளும் குடும்ப சதுர கம்பெனிக்கு விதிவிலக்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X