சென்னை : சாலை தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இரு பொறியாளர்கள் உயிரிழந்தனர்.
இவர்கள் இருவரும், சென்னை மவுன்டில் வாடகை வீட்டில் தங்கி பணி செய்து வந்தனர்.நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், நண்பர்கள் இருவரும் யமஹா எப்.இசட்., இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றனர்.
பின், நள்ளிரவு ஜாபர்கான்பேட்டை 100 அடி சாலை வழியாக வீடு திரும்பினர். இருசக்கர வாகனத்தை ஜெயசூர்யா ஓட்டி சென்றார். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், துாக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் அவர்களது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.