வேப்பூர் : வேப்பூர் அருகே, மீன்பிடி வலையில் மலைப்பாம்பு சிக்கியது.
இந்நிலையில், நேற்று காலை, வேப்பூர் அடுத்த நல்லுாரில் மணிமுக்தா ஆற்றையொட்டி கட்டப்பட்டிருந்த வலையின் ஒரு பகுதி அறுந்து விழுந்தது போல் இருந்தது.
இதை கண்ட இளைஞர்கள் சிலர் வலையை பிடித்து இழுத்தபோது, அதில் மலைப்பாம்பு சிக்கியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடினர்.
தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், வலையில் சிக்கியிருந்த 7 அடி நீள மலைப்பாம்பை மீட்டு, காப்பு காட்டில் விட்டனர்.