திருப்பூர் : பிரேத பரிசோதனை அறிக்கை தர போலீஸ் ஏட்டு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மக்பூல் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் அறிக்கையை தர, உடுமலை போலீஸ் ஏட்டு சேகர் என்பவர் கீராவிடம், 5,000 ரூபாய் பெற்றுள்ளார்.
இதுகுறித்து விசாரித்து அவர் பெற்ற பணத்தை திரும்ப வாங்கித்தருமாறு, திருப்பூர் எஸ்.பி.,யிடம் கடந்த மாதம் கையூட்டு ஒழிப்பு பாசறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஒரு மாதமாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவர் மீது உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தப் பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனு அளித்தனர்.
எஸ்.பி., செஷாங் சாய் கூறுகையில்,''இந்த புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, உடுமலை டி.எஸ்.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.