பெரம்பலுார் : அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 22.
கூலித் தொழிலாளியான அவர், 17 வயது சிறுமியை கடத்திச் சென்று வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, விசாரணை நடத்திய ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், நேற்று ஜெயக்குமாரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், ஜெயக்குமாருக்கு உடந்தையாக இருந்தாக அவரது தாய் சாந்தியையும் போலீசார், கைது செய்துள்ளனர்.