அயலக தமிழர் நல வாரியம் தமிழக அமைச்சர் தகவல்
Added : டிச 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



திருப்பூர் : ''வேலைவாய்ப்பு தேடி வெளிநாடு செல்வோரை பாதுகாக்க அயலக தமிழர் நலவாரியம் அமைக்கப்பட உள்ளது,'' என, அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.



திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:

தமிழகம் அமைதி பூங்காவாக மலர வேண்டும் என, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் எட்டு முறை அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வெளிப்படை தன்மையுடன் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடந்துவருகிறது. தமிழகத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வெளிநாடு செல்வோர் முழு விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

சிலர் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கின்றனர்; அவர்களை அரசு மீட்டுவருகிறது. வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தமிழர் நலன் பாதுகாக்கப்படும். இதற்கென, அயலக தமிழர்கள் நல வாரியம் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள, 106 இலங்கை தமிழர் முகாம்களில், 7,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களில் முதல் கட்டமாக, 3,500 பேருக்கு, 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X