விழுப்புரம் : விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ.,வின் 6ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடந்தது.
எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், கோலியனுார் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், வளவனுார் நகர செயலாளர் சங்கரலிங்கம், ஜெ., பேரவை பாலமணிகண்டன், விழுப்புரம் நகர செயலாளர் கமருதீன், துணைச் செயலாளர் பூராசாமி, நகர பொருளாளர் வெங்கடேசன், சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் அடுத்த கெடாரில் நடந்த நிகழ்ச்சியிலும், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முத்துராமன், கஜேந்திரன், மோகன், தனுசு, நகர செயலாளர்கள் இளங்கோவன், ஏழுமலை, முருகேசன், நெப்போலியன், திருவேங்கடம், குமார், சரவணன், லுார்து சேவியர், சங்கரலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.