காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பணிமனையில் உள்ள தடம் எண் 75 என்ற அரசு பேருந்து, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அய்யங்கார்குளம், வெம்பாக்கம்,பொக்கைசமுத்திரம் வழியாக நயந்தாங்கல் கிராமத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.
மகளிருக்கு கட்டணமில்லாமல் இயக்கப்படும் இப்பேருந்தின் பின்பக்கம், பயணியர் அறிந்துகொள்ளும் வகையில், தடம் எண் மற்றும் ஊரின் பெயர் எழுதப்பட்டபெயர் பலகை கண்ணாடியில் துாசு படிந்து இருந்தது. இதனால், இப்பேருந்து எங்கிருந்து எந்த ஊருக்கு செல்கிறது என, பயணியரால் அறிந்துகொள்ள முடியவில்லை.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் அரசு பணிமனை சார்பில், தடன் எண் 75 பேருந்து முழுதும் வாட்டர் வாஷ் செய்யப்பபட்டு, கண்ணாடி சுத்தமாக துடைக்கப்பட்டுள்ளதால், தற்போது தடம் எண் மற்றும் ஊர் பெயர் எழுதப்பட்ட பெயர் பலகை தற்போது 'பளீச்' என, தெரிகிறது.