காஞ்சிபுரம்சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி சாலையில், புதிதாக கட்டப்பட்ட படவேட்டம்மன் கோவில் கும்பாபிேஷகம் ஆக., 1ல் நடந்தது.
இக்கோவிலில், காமாட்சியம்மன் என்ற ஏலவார்குழலி அம்பிகைக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாண உற்சவமும், படவேட்டம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கும் திருவிழா வரும் 12ல் நடக்கிறது.
விழாவையொட்டி, 12ல் காலை 6:30 மணிக்கு படவேட்டம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், காலை 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், படவேட்டம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தலும், மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு திருமண விருந்தும், மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவமும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாட்டினை படவேட்டம்மன், கன்னியம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.