ஆன்மிகம்
திருமஞ்சனம்: நேரம்: காலை 9:00 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம். மாலை 4:45 மணிக்கு பெரிய வீதி புறப்பாடு. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.
கார்த்திகை தீப விழா: நேரம்: இரவு7:00 மணிக்கு கபாலீஸ்வரர் சுவாமி கார்த்திகை தீபம் சொக்கப்பனை ஏற்றுதல். இடம்: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்.
பாராயணம்: நேரம்: காலை 8:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை, பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கிருஷ்ண யஜுர்வேத ஜட பாராயணம். இடம்: வேதாந்த பவனம், ராமானுஜம் தெரு, தி.நகர்.
மஹோற்சவம்: பகவான் யோகி ராம்சுரத்குமார் 104வது ஜெயந்தி விழா. ஏகாதச ருத்ர பாராயணம், அபிஷேகம், பூஜை - காலை 7:00 மணி முதல். இடம்: மஹாரண்யம் முரளிதர சுவாமிஜி மண்டபம், அபயம் - யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், ஆதனுார், கூடுவாஞ்சேரி.
மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி: ஹிந்து இறைபணி மன்றம், ஹிந்து சமய மன்றம் இணைந்து நடத்தும் உலகம், நாடு, வீடு, குடும்பம் நலனுக்காக சமுத்திர கரையில் பூஜை, மஹா தீப ஆரத்தி. மாலை, 5:00 முதல். இடம்: வேம்படியம்மன் கோவில் குப்பம் பீச் ரோடு, மருந்தீஸ்வரர் கோவில் அருகில், திருவான்மியூர்.
தத்தாத்ரேயர் ஜெயந்தி: கோமாதா பூஜை - காலை 7:30 மணி. குருவந்தனம் - காலை 8:00 மணி. மஹன்யாசம், ருத்ர ஏகாதசி, ஜபம் - காலை 9:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர்.
பவுர்ணமி கிரிவலம்: சுவாமிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 5:00 மணி. இடம்: பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன் கழனி.
வன்னி நவராத்திரி: வாராஹிக்கு ஊஞ்சல் உற்சவம் - 6:30 மணி. இடம்: பஞ்சமி வாராஹி சமேத மனோன்மணீஸ்வரர் அறச்சபை, எஸ்.எஸ்., மஹால், துளிர்காத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.
பவுர்ணமி வழிபாடு: சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை - காலை 7:00 மணி முதல். இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.
பவுர்ணமி அன்னதானம்: அலங்கார ஆராதனை, சிறப்பு அன்னதானம் - பிற்பகல் ௧:௦௦ மணி. இடம்: அவுடத சித்தர் மலை மடம்: ௬ - ஏ, டேங்க் தெரு, அரசன் கழனி.
குரு பூஜை: கணம்புல்லர் நாயனார் குரு பூஜை, மாலை 6:30 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.
குரு பூஜை: கணம்புல்லர் நாயனார் குரு பூஜை, இரவு, 7:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.
சொற்பொழிவு
இன்னிசை: சந்தோஷ் சுப்ரமணியன் குழுவினர் - பாட்டு மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
கம்ப ராமாயண வகுப்பு: கிட்கிந்தா காண்டம், தானைகாண் படலம். மாலை ௬:௩௦ முதல் இரவு ௮:௦௦ மணி வரை. இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார்.
பொது
நாட்டிய விழா: புஷ்பாஞ்சலி கல்சுரல் டிரஸ்ட் சார்பில் பரதநாட்டியம்: சுனிதா ஹரி மாணவியர் - மாலை 5:30 மணி. குமாரி வர்ஷிணி ராஜகோபால் - இரவு 7:00 மணி. ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம், சிவசாமி கலாலயம், சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, மயிலாப்பூர்.
கண்காட்சி: நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, ராஜஸ்தான் மாநில கலைக் கண்காட்சி. இடம்: சங்கரா மெயின் ஹால், ஆழ்வார்பேட்டை.
தீபத் திருவிழா: நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை விளக்குகள் கண்காட்சி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.