வியாசர்பாடி -வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் கஞ்சா விற்பதாக எம்.கே.பி.நகர் போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரிடம் விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரது பையை சோதனையிட்டனர். இதில் 2 கிலோ கஞ்சா சிக்கியது.
விசாரணையில் அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்பைச் சேர்ந்த ஹரிஷ் குமார், 27, என்பது தெரியவந்தது.
இவர், அயனாவரம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இதையடுத்து, ஹரிஷ் குமாரை எம்.கே.பி.நகர் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.