செங்குன்றம், செங்குன்றம் அடுத்த தீர்த்தகிரையம்பட்டு, கோமதி அம்மன் நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 22. இவர், நேற்று முன்தினம் இரவு, பிரதான சாலை வழியாக, இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, செங்குன்றம், பம்மதுகுளம், கே.கே.நகரைச் சேர்ந்த மற்றொரு கார்த்திக், 31, என்பவர், மேற்கண்ட கார்த்திக்கை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அவரது மொபைல் போன், 1,500 ரூபாயை பறித்து சென்றார். இது குறித்து விசாரித்த, செங்குன்றம் போலீசார், நேற்று காலை கார்த்திக்கை கைது செய்தனர்.