ஓட்டேரி பெரம்பூர் அடுத்த எம்.கே.பி., நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 57. இவருக்கு, ஓட்டேரி, சச்சிதானந்தம் தெருவை சேர்ந்த எபினேசர், 56, என்பவர் அறிமுகமானார். இவர், மாரிமுத்துவின் உறவினருக்கு, அரசு வேலை வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.
இதை நம்பிய மாரிமுத்து எபினேசர் கேட்ட, 8 லட்சம் ரூபாயை கொடுத்திருக்கிறார். மூன்று ஆண்டாகியும், வேலையோ, கொடுத்த பணமோ திரும்ப கிடைக்கவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த மாரிமுத்து, ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.
விசாரித்த போலீசார், நேற்று காலை எபினேசரை கைது செய்து, அவரது, 'டொயோட்டோ' காரை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் பலரிடம், அரசு வேலை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், வீடுகள் வாங்கி தருவதாக 83 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.