சென்னை, சிவில் சர்வீசஸ் என்ற அகில இந்திய குடிமைப்பணி தேர்வின், முதல் நிலை தகுதி தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மூன்றிலும் தேர்ச்சி பெறுவோர், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட அகில இந்திய பணிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
இந்தாண்டு ஜூன் 5ல் நடந்த முதல்நிலை தேர்வில், 5.5 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 13 ஆயிரத்து, 90 பேர் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வு எழுதினர். கடந்த செப்., 16 முதல் 25 வரை முதன்மை தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
அதில், 2,529 பேர் தேர்ச்சி பெற்று, நேர்முக தேர்வில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர். இதில், தமிழகத்தில் இருந்து, 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், சென்னையில் உள்ள 'சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி'யின் மையத்தில் பயிற்சி பெற்ற, 72 பேர் தேர்ச்சி பெற்று, நேர்முக தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
மேலும், சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின், சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், டில்லி ஆகிய மையங்களிலும், 'ஆன்லைன்' வழியிலும் பயிற்சி பெற்ற, 540க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டில்லியில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்காக, சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் அனைத்து பயிற்சி மையங்களிலும், அகில இந்திய அளவில் மிகச்சிறந்த ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரிகளையும், தலைசிறந்த பல்கலைகளின் பேராசிரியர்களையும் கொண்டு, மாதிரி நேர்முகத்தேர்வை நடத்தப்பட உள்ளது.
எனவே, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும், சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் மாதிரி நேர்முக தேர்வு பயிற்சியில், கட்டணமின்றி இலவசமாக பங்கேற்கலாம்.
இதில் பங்கேற்க விரும்புவோர், interview@shankarias.in என்ற இ - -மெயில் முகவரிக்கும், 63797 84702 மற்றும் 90030 73321 என்ற மொபைல் போன் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என, சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி தெரிவித்துள்ளது.