தி.மலையில் மஹா தீப தரிசனம் 'அரோகரா' கோஷத்துடன் பரவசம்
Added : டிச 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திருவண்ணாமலை திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், நேற்று மாலை மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தி பரவசத்தில், திருவண்ணாமலை நகரமே குலுங்க, 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த 27ல், கார்த்திகை தீபத் திருவிழா, கொடியேற்றத்துடன்தொடங்கியது.
நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

சுவாமி கருவறை எதிரில், 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சிறப்பு யாக பூஜை நடந்தது.



பரணி தீபம்




நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்திலிருந்து, ஒரு மடக்கில் நெய் தீபம் ஏற்றப்பட்டு, அதை வைத்து ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு, அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து பகல், 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் தீர்த்தவாரி நடந்தது.பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தனித்தனி தங்க விமானத்தில் பஞ்ச மூர்த்திகள், மாலை, 4:30 மணி முதல், 5:30 மணிவரை மூன்றாம் பிரகாரத்தில் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்
பாலித்து, மஹா தீபத்தைக் காண, மலையை நோக்கியவாறு அமர்ந்தனர்.



ஆனந்த தாண்டவம்




பின், பார்வதி அம்மனுக்கு சிவபெருமான் இடபாகத்தை அளித்ததை நினைவு கூரும் வகையில், கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருந்து, அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடியே, மூன்றாம் பிரகாரத்திலுள்ள தங்கக் கொடிமரத்தின் முன், மலையை நோக்கியவாறு மாலை, 5:59 மணிக்கு எழுந்தருளினார்.
அதே நேரத்தில், காலையில் ஏற்றப்பட்ட பரணி தீப விளக்கிலிருந்து, கோவில் கொடிமரம் எதிரிலுள்ள அகண்ட விளக்கில் தீபமேற்றி, அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் உள்ளவர்களுக்கு
தெரியும்படி காட்டப்பட்டது.

அதைக் கண்டதும், மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என, பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு வழிபட்டனர். அர்த்தநாரீஸ்வரர், கோவில் இரண்டாம் பிரகாரத்திலுள்ள ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றார்.
தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலா வந்து அருள் பாலித்தனர். அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்பட்ட மஹா தீபம் தொடர்ந்து, 11 நாட்களுக்கு எரியும். இந்த ஜோதியை, 40 கி.மீ., சுற்றளவு வரை உள்ள பக்தர்கள் தரிசிக்கலாம்.



ஜன., 6ல் மஹா தீபம் மை பிரசாதம்




திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில்நேற்று ஏற்றப்பட்ட மஹா தீப கொப்பரையிலிருந்துசேகரிக்கப்படும் தீப மை, கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு, வரும் ஜன., 6ல் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் சிவகாமி சமேத நடராஜருக்கு சாத்தப்படும். பின், மஹா தீப நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இலவசமாகவும், மற்ற பக்தர்களுக்கு ஒரு பாக்கெட் பிரசாதம், 10 ரூபாய்க்கும் வினியோகம் செய்யப்படும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Sriniv - India,இந்தியா
07-டிச-202209:47:56 IST Report Abuse
Sriniv ஓம் நம சிவாய ஓம் சக்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X