திருவள்ளூர், தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், நடப்பு ஆண்டிற்கான ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இங்கு, குளிர்சாதன தொழில்நுட்பம், மெக்கானிக், சர்வேயர் மற்றும் இன்பிளான்ட் லாஜிஸ்டிக் உதவியாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி; வயது 14 - 40 வரை. மகளிருக்கு 14 முதல், உச்ச வயது வரம்பு இல்லை. மேற்குறிப்பிட்டுள்ள தொழிற் பிரிவுகளில் சேர மாணவ - மாணவியர் http://www.skilltraining.tn.gov.in/det/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, கும்மிடிப்பூண்டி அரசினர் தொழிற்பயிற்சி மைய முதல்வர் கோபிநாத்தை, 70109 08467 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.