திருவள்ளூர், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது முன்னோருக்கு திதி கொடுத்தும், புனித நீராடியும் கோவிலுக்கு சென்று, சயன கோலத்தில் உள்ள மூலவர் வைத்திய வீரராகவ பெருமாளை தரிசனம் செய்து செல்வர்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும், தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம். இதையடுத்து, கடந்த 5ம் தேதி முதல், மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாளை இரவு வரை, தங்க கவச தரிசனம் நடைபெறும்.
நாளை மறுதினம் முதல், வரும் ஜன., 1ம் தேதி வரை, தைலக்காப்பு நடைபெறும்.
தைலக்காப்பு நடைபெறும்போது மூலவருக்கு திரை சாற்றப்பட்டிருக்கும். முகம் மற்றும் பாதத்தை, பக்தர்கள் தரிசித்துச் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.