பழவேற்காடு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக மாறி, தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என, வானிலை மையம் கணித்து உள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு தினங்கள் கன மழை இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குனர் வேலன், மீனவர்களுக்கு தெரிவித்தாவது:
வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் தமிழக கடற்கரை பகுதியில் நுழையும் என, வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால், இன்று முதல், 9ம் தேதி வரை காற்றின் வேகம், 60- - 70 கி.மீ., வரை வீசக்கூடும்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், மறு அறிவிப்பு வரும் வரை, கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடலுக்கு சென்றிருப்பின் அவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, கரை திரும்ப அறிவுறுத்த வேண்டும்.
மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.