காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருச்சி, மதுரை, திருப்பதி, நாகர்கோவில் உள்ளிட்ட தொலை துார இடங்களுக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், பொதுமக்களின் வசதிக்காக, திருநெல்வேலி - திருத்தணி இடையே, தடம் எண் 180 டிடி என்ற சொகுசு மிதவை பேருந்து சேவை துவக்கப்பட்டு உள்ளது.
தினமும், மாலை 6:00 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்படும் இந்த சொகுசுப் பேருந்து, அரக்கோணம் வழியாக, காஞ்சிபுரம் வருகிறது.
இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக திருநெல்வேலிக்கு செல்லும். பேருந்து கட்டணம் 625 ரூபாய் என, அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.