திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம், கடந்த மாதம் 9ம் தேதி முதல், 12, 13, 26 மற்றும் 27ம் தேதி ஆகிய நாட்களில் பெயர், சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் பணிகள் அனைத்து ஓட்டுச்சாவடிகளில் நடந்தது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தொழிலாளர் ஆணையர், அரசு முதன்மை செயலர் அதுல் ஆனந்த் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் ஓட்டுப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரமேஸ்வரி, சப்- - கலெக்டர்கள் பங்கேற்றனர். மகாபாரதி, ஐஸ்வர்யா, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்ரத்பேகம், அம்பத்தூர் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.