சேறும் சகதியுமாக சாலை
திருப்பூர், 57வது வார்டு, மண்ணாங்காடு பகுதியில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. டூவீலரில் வருவோர் தடுமாறி கிழே விழுகின்றனர். மண் கொட்டி சாலையை சீரமைக்க வேண்டும்.
-சுரேஷ், மண்ணாங்காடு. (படம் உண்டு)
இருந்தும் பயனில்லை
திருப்பூர், கூலிபாளையம் நால்ரோட்டில் உள்ள சிக்னலை, உயர்கோபுர மின்விளக்கு கம்பம் மறைக்கும் வகையில் உள்ளது. சிக்னல் இருந்தும் போக்குவரத்து நெரிசல் தீர்ந்தபாடில்லை.
-முருகேசன், கூலிபாளையம். (படம் உண்டு)
தேங்கிய நீரால் அவதி
திருப்பூர், சிக்கண்ணா கல்லுாரி முன், நடுரோட்டில் உள்ள குழியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து அதில் வாகனங்கள் பயணிப்பதால், சாலை சேதமாகிறது.
-ராஜா, காலேஜ் ரோடு. (படம் உண்டு)
வீணாகும் மின்சாரம்
திருப்பூர், நஞ்சப்பா ஸ்கூல் ரோட்டில் பகலிலும் தெருவிளக்கு எரிந்து, மின்சாரம் வீணாகிறது. விளக்குகளை சரியான நேரத்துக்கு அணைத்து மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டும்.
-வின்சென்ட்ராஜ், ராயபுரம். (படம் உண்டு)
சாலையை சீரமைக்கலாமே !
திருப்பூர், அணைப்பாளையத்தில் இருந்து புஷ்பா தியேட்டர் வரும் காலேஜ் ரோடு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகனஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
-தங்கதுரை, அணைப்பாளையம். (படம் உண்டு)
கழிவுநீரால் துர்நாற்றம்
திருப்பூர், 40வது வார்டு, இடுவம்பாளையத்தில் குட்டையில் கழிவுநீர் நிரம்பி ததும்பி வெளியேறுகிறது. துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
-முருகேசன், இடுவம்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், பெருமாள் கோவில் வீதி, பின் பாதாள சாக்கடை மூடி உடைந்து அவ்வப்போது கழிவுநீர் வழிந்தோடி, சுவாசிக்க முடியாதபடி கடும் துர்நாற்றம் வீசுகிறது. நிரந்த தீர்வு காண வேண்டும்.
-தேவராஜ், பெருமாள்கோவில்வீதி. (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர் கருமாரம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து மணியகாரம்பாளையம் செல்லும் சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.
-மணிகண்டன், கருமாரம்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட் பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து சாலை முழுதும் தண்ணீர் பாய்கிறது. சாலை சேதமாகும் முன் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்.
-மகேஷ்குமார், பி.எஸ்.,சுந்தரம் ரோடு. (படம் உண்டு)