குன்னுார்;குன்னுார்-மேட்டுப்பாளையம் பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் அந்தரத்தில் இருக்கும் பாறைகள் விரைவில் அகற்றப்படவுள்ளன.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை கோபி கோட்ட பொறியாளர் செல்வம், ஊட்டி உதவி கோட்ட பொறியாளர் சங்கர் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர்.
பின், பொறியாளர் செல்வம் நிருபர்களிடம் கூறுகையில்,''இப்பகுதியில் அந்தரத்தில் இருக்கும் பாறைகளை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
''கடந்த, 1994ல் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்ட இந்த இடத்தில், மழை நீர் வெளியேறும் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது உடனடியாக சீர் செய்யப்படும். இப்பகுதியில் உள்ள அபாய மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.