ஈரோடு: திருமணம் செய்து கொள்வதாக கூறி, உல்லாசம் அனுபவித்துவிட்டு, 'டிவி' நடிகையை ஏமாற்றிய வாலிபருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பழக்கம்
ஈரோடு, பா.தண்ணீர்பந்தல்பாளையம், பாறைகாட்டைச் சேர்ந்த, 24 வயது இளம்பெண், 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். 'டிவி' சீரியல்களிலும் நடித்து வந்தார்.
ஈரோடு, முத்தம் பாளையத்தைச் சேர்ந்தவர் ராகுல், 29; 'தி பிக்டே ஈவன்ட் மேனேஜ்மென்ட்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.
தொகுப்பாளினியாக இருந்த பெண்ணுடன், இவருக்கு அப்போது பழக்கம் ஏற்பட்டது. இருவரும், 2016 முதல், மூன்றாண்டுகள் காதலித்தனர். இந்நிலையில், 2018 மே மாதம், கோவையில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றனர். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக கூறிய ராகுல், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
கைது
பலமுறை பலாத்காரம் செய்த நிலையில், அப்பெண்ணிடம், 8 லட்சம் ரூபாய், 1.75 சவரன் நகையையும் அவர் பெற்றார். ஆனால், பணம், நகையை திருப்பி தராததுடன், அப்பெண்ணை திருமணமும் செய்யாமல் ஏமாற்றினார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில், கடந்தாண்டு புகார் அளித்தார். இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ராகுல் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது. நீதிபதி மாலதி, ராகுலுக்கு, 10 ஆண்டுகள் சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தார்.