புதுச்சேரி : புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வில்லியனுார் சிவன் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நலப்பணிச் சங்க தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.
பொருளாளர் ஜானகிராமன் வரவேற்றார். தாசில்தார் அய்யனார், செயலர் கதிரேசன் முன்னிலை வகித் தனர். மண்டல அமைப்பாளர்கள் ரவி, ரமேஷ், ரவீந்திரன், ஜான்சிராணி நோக்கவுரையாற்றினர்.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, சங்க நிர்வாகிகள், டெங்கு காய்ச்சலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெரிக்கை நடவடிக்கைகள் குறித்த துண்டறிக்கைளை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏற்பாடுகளை, மண்டல அமைப்பாளர்கள் ஜாகிர் உசேன், நந்தகோபால், மண்ணாங்கட்டி ஆகியோர் செய்திருந்தனர்.
மண்டல அமைப்பாளர் அபினேஷ் நன்றி கூறினார்.