பாகூர், : சேலியமேடு உழவர் உதவியகம் சார்பில், அரங்கனுார் கிராமத்தில் 'எனது காப்பீடு எனது கையில்' என்ற தலைப்பிலான பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பாகூர் வேளாண் அலுவலர் பரமநாதன் வரவேற்று, காலத்தோடு பயிர் காப்பீடு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். நேஷனல் இன்சூரன்ஸ் நிர்வாக அதிகாரி குமாரசாமி நோக்கவுரயாற்றினார்.
பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் சிவபெருமான், புதுச்சேரியில் பயிர் காப்பீடு செய்யப் படும் பல்வேறு பயிர்கள் குறித்து விளக்கவுரையாற்றி, 2022-23ம் ஆண்டில் சம்பா பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு, காப்பீடு சான்றிதழ்களை வழங்கினார்.
முகாமில், சேலியமேடு, அரங்கனுார், குடியிருப்புபாளையம், நிர்ணயப்பட்டு, ஆதிங்கப்பட்டு, பின்னாச் சிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை, சேலியமேடு உதவி வேளாண் அலுவலர் பாஸ்கரன், அலுவலக உதவியாளர் வேணுகோபால் ஆகியோர் செய்திருந்தனர். பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மைய வட்டார மேலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.