திண்டிவனம் : திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், அம்பேத்கர் சிலைக்கு, பா.ம.க., நிறுவனர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், முன்னாள் மாநில துணைத் தலைவர்கள் கருணாநிதி, சங்கர், மாவட்ட தலைவர் பாவாடைராயன், முன்னாள் மாவட்ட தலைவர் சம்பத்,நிர்வாகிகள் ராஜி, ராஜ்குமார், திண்டிவனம் நகர செயலாளர் ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.