விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வட்டார சுகாதார நிலையம் சார்பில் முண்டியம்பாக்கத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பி.டி.ஓ., சுமதி முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் வினோத் வரவேற்றார்.
அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் மூலம் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை புகழேந்தி எம்.எல்.ஏ., திறந்து வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
டாக்டர்கள் ஆறுமுகம், ராமகிருஷ்ணன், பாலாஜி, அய்யனார், சுகாதார மேற்பார்வையாளர் குமரப்பன், சுகாதார ஆய்வாளர்கள் நவீன், பிருதிவிராஜன், விஜயகுமார், மருந்தாளுனர்கள் நந்தகுமார், அண்ணாமலை, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெயபால், முருகவேல், முருகன், ஒன்றிய தலைவர் முரளி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.