புதுச்சேரி : புதுச்சேரியில் டி.எஸ். விஜயலட்சுமி குரூப்ஸ் இல்ல திருமண விழா நடைபெற்றது.
புதுச்சேரி டி.எஸ். விஜய லட்சுமி குரூப்ஸ் உரிமையாளர் டி.எஸ்., மணி - விஜயலட்சுமி மகன் சதீஷ்பிரபுவிற்கும், திருப்பதி ஸ்ரீ பாபு ஜூவல்லரி உரிமை யாளர் பாபு - மீனா மகள் ஜெயஸ்ரீக்கும் திருமணம் நடைபெற்றது.
புதுச்சேரி, சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்த திருமண விழாவில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., காங்., தலைவர் சுப்ரமணியன், எதிர்க்கட்சி தலைவர் சிவா, துணை சபாநாயகர் ராஜவேலு, முன்னாள் அமைச்சர் கந்த சாமி, சட்டசபை காங்., தலைவர் வைத்தியநாதன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் நேரு, பிரகாஷ்குமார், செந்தில்குமார், சம்பத்.
முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், நந்தா சரவணன், ஓம்சக்தி சேகர், காங்., மூத்த துணை தலைவர் நீலகங்காதரன், நகை வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன், விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.