மாணவர்கள் மோதல்: 87 பேர் மீது வழக்கு
Added : டிச 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே, ஐ.டி.ஐ., மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இருதரப்பை சேர்ந்த 87 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த துறையூரை சேர்ந்தவர் வீரமுத்து மகன் ராஜா; முருகன்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாத்திகன் மகன் நசின்ராஜ்.

இருவரும் அரியலூர் மாவட்டம், கூவத்தூர் அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கின்றனர். இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இருவரும் பஸ்சில் செல்லும்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை ஐ.டி.ஐ., முடிந்து வீட்டிற்கு வரும்போது, ராஜாவின் ஆதரவாளர்களும், நசின்ராஜின் ஆதரவாளர்களும் தாக்கிக் கொண்டனர்.

பிரச்னை தொடர்பாக ராஜாவின் உறவினர்கள், பெண்ணாடம் போலீசில் புகார் அளிக்க சென்றபோது, துறையூர் பஸ் நிறுத்தத்தில் ராஜாவின் ஆதரவாளர்கள் சம்பவம் குறித்து பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது, ராஜாவின் ஆதரவாளர்களை மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர் ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, கல்வீசி தாக்கிக்கொண்டனர்.

இதில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், பள்ளி மாணவி உட்பட இரு தரப்பை சேர்ந்த 14க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் திட்டக்குடி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, இரு தரப்பினரும் தனித்தனியே துறையூர் மற்றும் பெண்ணாடத்தில் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.பி., சக்திகணேஷ் தலைமையிலான போலீசார், சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர்.

துறையூர் மற்றும் முருகன்குடி பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க, 100க்கும் மேற்பட்ட போலீசார் இரண்டாம் நாளாக நேற்றும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, இரு தரப்பினர் அளித்த புகாரின்பேரில், ராஜா, நசின்ராஜ் உட்பட 87 பேர் மீது பெண்ணாடம் போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X