பார்க்கிங் வசதி தேவை
மேட்டுப்பாளையம் - மூலக்குளம் சாலையில் பார்க்கிங் வசதியில்லாததால் வாகனங்கள் சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்துக்குஇடையூறாக உள்ளது.
மகாலிங்கம், மேட்டுப்பாளையம்.
சாலை சீரமைக்க வேண்டும்
எல்லைபிள்ளைச்சாவடி, தந்தை பெரியார் நகர், 3வது குறுக்கு தெருவில் சாலை குண்டும், குழியாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.
ரேவதி, எல்லைபிள்ளைச்சாவடி.
விரயமாகும் மின்சாரம்
பிள்ளையார்குப்பம், மீனாட்சி அம்மன் கோவில்வீதியில் தண்ணீர் டேங்க் அருகேயுள்ள தெருவிளக்கு பகல் நேரத்திலும் எரிந்து கொண்டுள்ளது.
ஜெயச்சந்திரன், பத்துக்கண்ணு.