புதுச்சேரி : அம்பேத்கரின் 66ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனையொட்டி, சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க் கள் ஆறுமுகம், ரமேஷ், லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
என்.ஆர்.காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ஜ.,: அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.,க் கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், அசோக்பாபு, வெங்கடேசன், ராமலிங்கம், சிவசங்கர், அங்காளன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
காங்.,: மாநில தலைவர் சுப்ரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்த ராமன், நீலகங்காதரன், பாலன், மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.,: மாநில அமைப்பாளர் சிவா, அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் நிர்வாகி கள் புதுச்சேரி லப்போர்த் வீதியில் இருந்து ஊர்வலமாக சென்று சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.,: கிழக்கு மாநில செயலாளர் அன்ப ழகன், முன்னாள் எம்.எல். ஏ.,க்கள் பெரியசாமி, ராஜாராமன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க., மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் மற்றும் நிர்வாகிகள் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் படத்தை அலங்கரித்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உருளையன்பேட்டை: உருளையன்பேட்டை தொகுதி பா.ஜ., சார்பில் தொகுதி பொறுப்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் ராஜா தியேட்டர் சிக்னல் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், ராமலிங்கம், அசோக்பாபு, சிவசங்கரன், அங்காளன், மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், துணைத் தலைவர் செல்வம், பட்டியலணி தலைவர் தமிழ்மாறன், தொகுதி தலைவர்கள் உருளையன்பேட்டை நாகம்மாள், ராஜ்பவன் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.