புவனகிரி : 'தினமலர்' செய்தி எதிரொலியாக, சாத்தப்பாடி, சொக்கன் கொல்லை ஏரிகளில் பாசன வாய்க்காலில் ஷட்டர் அமைக்கப்பட்டது.
புவனகிரி அருகே சொக்கன் கொல்லை, சாத்தப்பாடி ஏரிகளில் தண்ணீரை தேக்கி, பாசன வாய்க்காலில் நிரப்பி, அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஏரிகளை துார் வாரி ஆழப்படுத்திய நிலையில், பாசன வாய்க்கால் பகுதியில் ஷட்டர் அமைக்காததால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் ஆலோசனையில்பேரில், இரு இடங்களில் தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் ரூ.4 லட்சம் செலவில் புதிய ஷட்டர் அமைக்கப்பட்டது.
இதற்கான பணிகளை, உதவி பொறியாளர் கவுதமன், தொழில்நுட்ப பணியாளர் குமார், பணி ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் விரைந்து மேற்கொண்டனர்.