திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப் துவக்க விழா மற்றும் சாசன நிர்வாகிகள், உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடந்தது.
மாவட்ட ஆளுநர் சரவணன் தலைமை தாங்கினார். சம்பத்குமார், தேவசேனாதிபதி, இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.
டி.எஸ்.பி., பழனி வாழ்த்தி பேசினார். சாசன தலைவர் வாசன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கோத்தம்சந்த், துணைத் தலைவர் ஜிவசீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், திட்ட இயக்குனர்கள் பதவியேற்றனர்.
விழுப்புரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சரவணகுமார், நம்மாழ்வார், துரைராஜ், அன்பழகன், சங்கராபுரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துகருப்பன், சீனிவாசன், மணிகண்டன், சுரேஷ் வாழ்த்துரை வழங்கினர்.
கோட்டமருதுாரில் உள்ள தாய் மனசு மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளைக்கு ரூ.15,000 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள், அரகண்டநல்லுார் பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 மதிப்பில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.