திண்டிவனம் : திண்டினம் அடுத்த கீழ்கூடலுார் இந்திராகாந்தி ஜெயந்தி கல்லுாரியில் முப்பெரும் விழா நடந்தது.
திண்டிவனம் அடுத்த கீழ்கூடலுார் இந்திரா காந்தி ஜெயந்தி கலை அறிவியல் கல்லுாரி மற்றும் டாக்டர் ராஜா பாதர் கல்வியியல் கல்லுாரிகளின் சார்பில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் பாக்யலட்சுமி வரவேற்றார்.
கல்வியியல் கல்லுாரி முதல்வர் சுகுணா, கலை அறிவியல் கல்லுாரி துணை முதல்வர் திவ்யா, இணை முதல்வர் தாட்சாயினி ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.
விழாவில், கோபாரதி, திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி, திரைப்பட இயக்குனர்கள் சுகிமூர்த்தி, விக்ரம் ஆகியோர் மாணவர்களுக்கு தலைமைப் பொறுப்பு மொழி ஆளுமை, கடமை விழிப்புணர்வு குறித்து பேசினர்.
விழாவில், நிறுவன தலைவர் கங்கா ராஜாபாதர், துணைத் தலைவர் ரபீந்திரநாத் தாகூர், செயலாளர் தேவேந்திரநாத் தாகூர், இணைச் செயலாளர் சுகர்நாத் உட்பட பலர் பங்கேற்றனர்.